என்றென்றும் அம்மா

அம்மா மடியில் அனைத்து பிடித்தால்,
அன்பாய் , இதமாய் , சுகமாய்,
அவள் கர்ப்ப கால நாட்கள்
என் கண்களீள்...

வாய் திறந்து பேச
கற்று கொடுத்தாள்,
என் குட்டி பல்லில்
கடிபட்டு சிரித்தாள்,
என் முட்டி நோக
விழுந்து நடந்த போது,
தட்டி கொடுத்தாள்.
சுட்டி பையன் என்று
பலர் புகழ, பெருமிதம் கொண்டாள்.
பட்டபடிப்பு முடித்ததும்
அவள் கண்களீள் ஆனந்த கண்ணீர்.

என்னை வளர்த்து அவள் முடித்த போது
முதுமை பெற்றாள்,
உடல் முதிர்ச்சி பெற்றாலும்,
அவள் கண்கள் என்னை கானும்
பிறந்த குழந்தையாய்....

அவள் அன்பு சுழளீள்
சிக்கி ஆனந்தம் கொள்வேன்
என்று்ம் அவள் நினைவுகளீல்.
"அம்மா!" என்று
இதய கதவுகள்
படபடக்க...
அவள் நிம்மதியாய்
உறக்கம் கொள்கிறாள்
அவள் கல்லறையில்......

எழுதியவர் : நந்தலாலா (8-Jan-11, 4:10 pm)
Tanglish : yendrendrum amma
பார்வை : 473

மேலே