மானிடம் வாழ வேண்டும்

அகிலத்தில் அன்றாடம் அவலங்கள்
அரங்கேறும் காட்சிகள் பலவிதம் !
அவதியுறும் மனிதர்களும் பலபேர்
அவர்களில் இவரும் ஒருவரன்றோ !
மனிதனை மனிதனே இழுப்பதும் நம்
மானிடத்தின் கொடுமை நிகழ்வன்றோ !
பிழைத்திட வழியென்று வாதிடுவோரே
உழைத்திடும் உயிரை மதிப்பவர் தானோ !
பாவ புண்ணியமென பேசித் திரிபவரே
பாவம் அவருமென நினைப்பதுண்டோ !
பாரம் தெரிந்திடும் சுமப்பவருக்குத்தான்
பாதம் தேய்ந்திடும் இழுப்பவருக்குத்தான் !
மாற வேண்டும் இந்நிலை மண்ணிலே
மாற்றிட வேண்டும் மனதை நாமும் !
மனிதனுக்கு மனிதனே சுமை ஆகாமல்
மானிடம் வாழ வேண்டும் அவனியிலே !
பழனி குமார்