குழந்தை...........

எங்கிருக்கிறேன் நான்
எப்படி வந்தது
இந்த பாலைவனம்
மற்றவரெல்லாம் மகிழ்ந்திருக்க
நானிருக்கும் இடம்மட்டும்
அனலாய் தகிப்பது ஏன்?
உயிரே.......
நீ எங்கிருக்கிறாய்?
என்ன செய்கிறாய்?
என் கதறல்கள்
உனக்கு கேட்க வில்லையா
போதும் என் ஜீவனே போதும்
வந்துவிடு என்னுள்
மலர்ந்துவிடு என் கருவில்.
என் வாழ்வை
சோலைவனமாக்கும்
மழையும் நீதான்.......
மலரும் நீதான்.....
மலடி என
மற்றவர் சொல்லும்போது
எரிகிறது என் தேகம்
குறுகி நிற்கிறது என் பெண்மை...
பெண்ணாய் பிறந்ததே
பெண்ணின இழுக்காய் தானோ?
என் கருவறையும்
கல்லறையாய் போனதோ?
வெட்கி போகிறேன் மொத்தமாய்....
துணையாய் வந்தவனும்
விட்டு சென்றான்
புது துணை தேடி..
வீட்டில் இருக்காதே அவபெயரே
என்கின்றனர் குடும்பத்தினர்..
நீ எதிர்வந்தால்
விளங்காது என்றனர்
உறவினர்...
அனைத்தையும்
இழந்த பின்னும்
எஞ்சிய உயிரை
சுமந்து நிற்கிறேன்...
உன்னை சுமப்பதற்கு.......................

எழுதியவர் : இலக்யா (15-Oct-13, 12:13 pm)
Tanglish : kuzhanthai
பார்வை : 203

மேலே