உருகும் பனி... பெருகும் கடல்

கிரீன்லாந்து, அண்டார்டிகா பகுதிகளில் பனிப் படிவுகள் உருகுவதால் கடல் மட்டம் உயர்வது ஏற்கனவே கணிக்கப்பட்டதை விட அதிகமாக இருக்கும் என்று பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்.

பருவ நிலை மாற்றம் தொடர்பான பன்னாட்டு அரசுக் குழுவின் நான்காவது மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதை விட அதிகமாக கடல் மட்டம் உயரும் என்கிறார்கள் இவர்கள்.

கிரீன்லாந்து, அண்டார்டிகா பகுதியில் தான் உலகின் 99.5% பனி அடுக்குகள் இருக்கின்றன. இவை முற்றிலுமாக உருகும்போது உலக கடல் மட்டம் கிடுகிடுவென்று 63 மீட்டர் உயரம் அதிகரித்து விடும்.

தற்போது மேற்கண்ட ஆய்வாளர்கள், வழக்கமான, முறைகள் அல்லாது புதிய முறைகள் மூலம் பனி அடுக்கு கரைவை கணித்திருக்கிறார்கள்.
புதிய முறை கணிப்பின் படி, 2100-ம் ஆண்டுவாக்கில் குறைந்த பட்சம் 29 செ.மீ.யும், அதிக பட்சம் 84 செ.மீ.யும் கடல் மட்டம் அதிகரிக்கக் கூடுமாம். இது அண்டார்டிகா, ஐஸ்லாந்து பகுதி பனி அடுக்கு உருகலால் மட்டும் ஏற்படும் கடல் மட்ட உயர்வு, கடல் நீர் மட்டத்தை உயர்த்தும் பிற காரணிகளும் இணையும்போது ரிஸ்க் ரொம்பவே அதிகமாக இருக்கும். அதாவது 2100 ம் ஆண்டளவில் 1 மீட்டர் அளவுக்கு கடல் மட்டம் உயரக்கூடும். இதனால் ஏற்படும் விளைவுகள் ரொம்பவே மோசமாக இருக்கும் என்று இந்த ஆய்வாளர்கள் மதிப்பிட்டிருக்கிறார்கள்.

வருங்கால தலைமுறையைக் கருத்தில் கொண்டு சுற்றுச் சூழலைக் காப்பது நமது கடமை!

நன்றி
தந்தி.

எழுதியவர் : muhammadghouse (16-Oct-13, 10:42 am)
பார்வை : 301

மேலே