பாடல்கள் ஆயிரம்

சிறு வயதில்
வானொலி அலைவரிசையை
திருப்பி திருப்பி
அப்பாவிடம் அடி வாங்கிய
நாள் முதல் இன்று வரை
சில சுமையான தருணங்களில்
சுகமாய் என்னை வருடி செல்வது
இளையராஜாவின் பாடல்கள்தான்....

சோகமாய் நானிருந்தால் என்
சோகத்தோடு ஒட்டிக்கொள்ளும்
சில பாடல்கள்
என் மனதை மாற்றிவிடும் சுகமாய்....

பேருந்து நெருசலில்
சிக்கி தவிக்கும் போதும்
என் உதடுகளை முனுமுனுக்க வைக்கும்
சில பாடல் வரிகள்....

பல உறக்கமில்லா இரவுகளில்
என்னை தாலாட்டி தூங்க வைப்பது
என் அன்னைக்கு அடுத்தபடி
மேலோடி பாடல்கள்தான்....

தெருக்களில் நடந்து செல்லும் போது
பக்கத்து வீடுகளில் கேட்கும்
பாடல்கள் என்னை அங்கேயே
கைதியாய் சிறைபடுத்தி வைத்துவிடும்....

கல்யாண வீடுகள்
கோவில் திருவிழா என
எங்கும் நன் கேட்க
தவறியதில்லை பாடல்களை....

காதல் மகிழ்ச்சி சோகம்
என நம் மனநிலையை பொறுத்து
நாம் கேட்ட்கும்
பாடல்கள் ஆயிரம்
நம்மை கவரும் பாடல்கள்
நமக்கு தெரியாமலேயே
நம்மை வழிநடத்துகிறது
அதன் பாதையில்....

எழுதியவர் : பாலமுதன் ஆ (11-Jan-11, 6:41 am)
சேர்த்தது : பாலமுதன் ஆ
Tanglish : padalkal aayiram
பார்வை : 643

மேலே