தனிமையில் தவிக்கின்றேன்...!

நிலவுக்கு கூட ஓய்வு உண்டு !
முகம் தேய்ந்து விடும், முழுநிலவு குறைந்து விடும்!
அமாவாசையன்று முற்றிலும் மறைந்து விடும்!

என்னவளுக்கு என்றும் மறைவில்லை!
அவள் அழகிற்கு என்றும் குறைவில்லை!

அவள் கண்களின் குளிர்ச்சிக்கு நிலவும் இணையில்லை !
தனிமையில் தவிக்கின்றேன் ! ஏன் நீ இன்னும் எனக்கு துணையில்லை !

உனைக் கனவிலும் நிஜத்திலும் காண்கிறேன் ! கைப்பிடிக்கத் தவிக்கின்றேன் ! காலம் இன்னும் கூடவில்லை !
இரவு முழுதும் கழிக்கின்றேன் உன் நினைவிலே !எனக்கு நேரம் ஓடவில்லை !

எழுதியவர் : மணிகண்டன் குரு (17-Oct-13, 12:06 am)
சேர்த்தது : Manikandan Guru
பார்வை : 112

மேலே