இதுதான் வாழ்க்கை!

காலையில் சென்றவள்
மாலையில் வீடுதிரும்பவில்லை!
தந்தையோடுதான் சென்றாள்
அடக்கத்தோடுதான் இருந்தாள்
ஒழுக்கமாகத்தான் நடந்தாள்
யாரோடும் எவரோடும்
வம்பிழுத்ததேயில்லை!
யாரையும் எவரையும்
பரிகசித்ததேயில்லை!

அன்பிற்கு கட்டுப்பட்டுதானிருந்தாள்!
அறிவாக செயல்பட்டுதானிருந்தாள்!
பெற்றோர் சொன்னவனை
கட்டிக்கொள்ள சம்மதித்துதானிருந்தாள்!
அன்பாக அம்மாவிற்கு
"டாட்டா" சொல்லிதான் வந்தாள்!

அழைத்துக்கொண்டானே அவன்!
வழியில் பேருந்துபோல் எமன்வந்து!
வேலைகாக சென்றவள்
வீடுதிரும்பவில்லையே!...

ஒரு நொடிக்குள் வாழ்க்கை
நொடித்துவிடும் எவருக்கும்!
அருவருக்கத்தக்க
நடத்தையும் வேண்டாம்!
அடிமைபோல் கட்டுப்பட்டு
வாழ்ந்திடவும் வேண்டாம்!

மனம்போல் இருப்போம்
பிறரை இம்சிக்காமல்!
சிலகாலமாவது...
சிறப்பாக வாழ்வோம்!

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (17-Oct-13, 1:09 am)
பார்வை : 173

மேலே