தென்றலே உன் பெயர் .................?

பூந்தென்றல் வீசும்
பொன்மாலைப் பொழுதினில் -உன்
பொன்விரல் பிடித்து -என்
காதலைச் சொன்னேன்!

விசுக்கென்று விரலை
விடுத்தாய், மெல்ல -உன்
அருகினில் வந்தேன்
அடி ஒன்று தள்ளி
நின்றாய்!

உன் செவ்விதழ் பதித்து
முத்தமிட்டேன் -என்னை
சட்டென தள்ளி விட்டாய்
விடாமல் -உன்
கையைப் பிடித்தேன்!

விடு என்று சொல்லி
விலகி நின்றாய்
விட்டு நான் செல்ல
மனதுமில்லை -உன்
கை பிடிக்க வழியுமில்லை!

தென்றலே உன் பெயர்
என்ன சொல் -உன்
வீட்டிற்கு வழியும் சொல்
தேடி வருகிறேன்
தாலிக் கயிறுடன்!

எழுதியவர் : சஹானா (17-Oct-13, 1:52 am)
பார்வை : 161

மேலே