ஏன் இப்படி மயக்கினாய்...!

அன்பே...!
அதிகாலை தேநீர்
என் உணவுக்குள் மிதக்கிறது...

சூரிய ஒளியில் மரமும்
அமிர்தசரஸ் கோவிலாய் ஜொலிக்கிறது...

குடிக்கும் தண்ணீருக்குள்
தாஜ்மஹாலே தெரிகிறது...

மண்ணில் மழை போல தோன்றி என்னை
உன்னில் நனைத்து விட்டுப் போனாய்..!

கண்ணில் விதை போல தோன்றி உன்னை
என்னில் விதைத்து விட்டுப் போனாய்...!

அன்பே...சொல் என்னை
ஏன் இப்படி மயக்கினாய்...!

எழுதியவர் : போக்கிரி கவிஞன் *ராஜா* (19-May-10, 9:59 pm)
சேர்த்தது : POKKIRI
பார்வை : 971

மேலே