வாய்மையே நீ எப்போது வெல்வாய் ? சொல்
கண்களை மண் அரித்து போய் இருந்தாலும்....கண்ணீராக வந்தது......!
ஏன் இப்படி நடந்தது ? என்று என் எலும்புக்கூட்டுக்குள் இதயத் துடிப்பில்லாத ஒரு ஏக்கம் கலந்த துக்கம்...!
மண்புழு ஒன்று இப்போது என் ஒரு விலா எலும்பின் வழியாக நுழைந்து மறுபக்கம் வெளிவருகையில்....
இப்போதும் வலிக்கிறது - அந்த மிருங்கங்களின் களியாட்டம்.....!
கடவுளே ஏன் என்னை இப்படி சிதைக்க அனுமதித்தாய் ?!
தட்....தட்...தட்.....
ஏதோ பூமியின் மேற்பரப்பில்.....கதவை தட்டுவது போல் ஒரு சத்தம்......
நெஞ்சின் எலும்புக் கூட்டை......மீண்டும் குத்தியது கடப்பாரை.......
போஸ்ட் மார்ட்டமா....?!
நல்ல வேளை.......மீண்டும் ஞாயம் கிடைக்கும்....!
என்று நிதானித்துக் காத்துக் கொண்டிருந்தேன்....!
கடப்பாரையின் சத்தம்.....இப்போது தொடராமல் நின்று போய் இருந்தது......!
மேலே சென்று கண்டு வந்த அந்த மண்புழு இப்போது என்னிடம் சொன்னது
கறுப்புப் பணத்துக்கு அடிமையாகி - சட்டமும் கற்பை பறி கொடுத்து விட்டது - அபலையே .....! என்று.....
மீண்டும் தொடங்கியது....மண் அரிப்பு......என் புதைக்கப் பட்ட தேகத்தில்........
ஆனால்......இப்போது இந்த சாவு.......அன்று இறந்தது போல் நரக வேதனையில் இல்லை........
புதைமணலாய் நிச்சயம் ஒரு நாள் உங்களை பிடித்து தின்பேன் உயிரோடு .........
அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.....
அதுவரை......
எரிமலை வெடித்துக் கொண்டே இருக்கும்....
அது இந்த அபலையின் கோபம்......
இப்படிக்கு,
உங்களால் உரு சிதைந்து
உருமாறிப்
புதைக்கப் பட்ட உண்மை.....!