அம்மா....
பத்து மாதம் என்றும் பாராமல்
என்னை ஒரு சுமை என்றும் கருதாமல்
வலிக்கொண்டு என்னை ஈன்றேடுத்தாய்...
என் முகம் பார்த்ததும், வலி கூட
காற்றில் பஞ்சாய் பறந்தது உனக்கு......
இதுவரை என் மனம் அறிந்து
நான் விரும்பிய அனைத்தையும்
எனக்கு கிடைக்கச் செய்தாய்....
குழந்தையில் என் அழுகையின்
பொருளை உணர்ந்து - என்
பசியை போக்கினாய் - பசி தீர்ந்தும்
நான் அழுததை கண்டு, என்ன ஆயிற்றோ???
என்று உன் உள்ளம் கலங்கினாய்..
இருட்டை கண்டால் பயம் எனக்கு...
அப்படி இருக்க எப்படி பத்து மாதம்
உன் கருவறையில் இருந்தேன்????
உன்னுள், உன்னுடன், இருப்பதென்றால்,
பத்து மாதம் அல்ல, என் ஜென்மம்
முழுவதும் உன் கருவறையில் நான் இருப்பேன்
மீண்டும் என்னை சுமக்க உனக்கு சம்மதமா???