தாயே!

தாயே!
உன் அன்பிற்காக ஏங்குகிறேன்!
ஆற்று வெள்ளத்தை போல் நீ கொடுத்த அன்பின்
அருமையை உணராமல் வாழ்ந்ததை நினைத்து இப்போது அழுகின்றேன்!
நீ செய்து போடும் அருஞ்சுவை உணவை அமுதை போல
உன் கையால் ஊட்டிக் கொள்ள வேண்டும் என இப்போது ஏங்குகிறேன்!
உன்னுடைய கஷ்டத்தை எல்லாம் துடைக்கும்
அருமருந்தாக நான் இருக்க வேண்டும் என இப்போது ஏங்குகிறேன்!
என்னுடைய சந்தோசங்களை உன்னிடம் கூறி நீ சிரிக்கும்போது
உன்னுடைய முகத்தை பாரதி கொண்டிருக்க வேண்டும் என இப்போது ஏங்குகிறேன்!
காலசுழல் நாற்காலியில் அமர்ந்து கொண்டு உன் அன்பின்
எல்லைகுள் வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை,
அப்போது ,
உன் அன்பெனும் அமுதத்தை எனக்கு
திகட்ட திகட்ட தருவாயா அம்மா..........!

எழுதியவர் : Velu (11-Jan-11, 3:50 pm)
பார்வை : 426

மேலே