மறைவில் (மனதில் ) என் வேதனை..

மழையில் நனைந்தபடி
மனதுள் அழுகிறேன்
மழைநீர் விழிநீர்
கலந்ததினால்,
என் கண்ணீர் யாரும்
அறிவதற்கில்லை.

தேகம் வளமாய் இருக்கிறது
அது மனதின் வேதனை மறைக்கிறது.
உண்ன உணவு பஞ்சமில்லை
எனக்குள்
உறக்கம் ஏனோ தஞ்சமில்லை.
மழையாகக் கண்ணீர் வடிக்கிறேன்
மழைநீர் விழிநீர்
கலந்ததினால்,
என் கண்ணீர்அறிவார் யாருமில்லை.

உயர்த்தி கட்டிய உறைவிடத்தில்
மனதுள் ஒடுங்கி நானும் வசிக்கின்றேன்.
செழிப்பு வனப்பு பஞ்சமில்லை
என்னுள் செந்நீர் வடிவது கொஞ்சமில்லை.
மழைநீர் விழிநீர் கலக்கிறது..
வலிதீர் மருந்து எதுவுமில்லை..

எழுதியவர் : Bala (18-Oct-13, 1:02 pm)
சேர்த்தது : bala17
பார்வை : 124

மேலே