கடவுளின் வெளிநடப்பு

கடவுள்
என்ன காட்சி பொருளா ?
காசு உள்ளவன்
மட்டும் காண்பதற்கு ?

இல்லாதவனுக்கும்
இருப்பவனுக்கும்
கடவுள்
ஒன்றா
யார் சொன்னது ?

காத்திருந்து
காணலாம்
இன்றோ
காசு இருந்தால் காணலாம்

கடவுளே
வந்தாலும்
காசு இருந்தால்
உள்ளே விடுவர்

குசேலன்
தந்த அவலக்கு
ஆசீர்வதித்தாய் அன்று
குபேரனே
வந்து கொட்டினால் தான்
வரிசையில் இடம்
கிடைகிறது இன்று

இது
வழிபாட்டுத்தலமா
இல்லை
வணிக வளாகமா ?

கடவுளுக்கு
கட்டணம் சொல்லி
கை விலங்குகிட்டாய்

பணத்தின்
வழியே
பரிகாரம் காண்கிறாய்
உன் பாவத்திற்கு

இருப்பவன்
இயலாதவனுக்கு
கொடுக்கையில்
உன்னுள்
உள்ளார் கடவுள்

கட்டணபலகை
கண்ட
கடவுள்
என்றோ
வெளிநடப்பு
செய்துவிட்டார்
உங்கள்
கோவிலில் இருந்து.............

எழுதியவர் : பாண்டிய இளவல் (மது ) (18-Oct-13, 12:21 pm)
பார்வை : 135

மேலே