அம்மா என்றால் சொர்க்கம் ...
உந்தன் சிறு துளி நானம்மா
எந்தன் மொத்தமும் நீயம்மா
உள்ளங்கய்யில் வளர்த்தாயே
தேவதை பிம்பம் நீயம்மா
எல்லாத்தவறும் மன்னித்தாய்
எனை நனைத்த மழையை நிந்திதாய்
எனக்காய் துயரம் சந்தித்தாய்
உன் உதிரம் பாலாய் ஒப்பித்தாய்
நாத்திகர் ஒதுக்கா கடவுள் நீ
நான் விழாமல் தாங்கும் விழுதும் நீ
தோளுக்கு மேலே வளர்ந்தாலும்
தலைதுவட்டி உலர்த்தும் தாரகை நீ
எத்தனை பிறவிகள் என்றாலும்
உந்தன் கருவறை சாவி கொடு
ஈரேழு ஜென்மங்கள் என்றாலும்
என்றும் தூங்க உன் சேலை கொடு