சமத்துவமே தீர்வு!
மனிதனை மனிதன்
மதியா உலகம்இது !
மதம், இனம்,மொழி என்ற
சாத்தான்கள் செய்யும் மாயம்இது!
அனைவர் உடம்பில் ஓடும்
உதிரத்தின் நிறமும் சிவப்பு!
அனைவர் உடம்பில் சிந்தும்
வியர்வைத்துளியின் சுவையும் உவர்ப்பு!
பின் ஏன்? வீணாய்
நமக்குள்ளே இந்த செருக்கு!
ஆறடி நிலத்தைத் தவிர
நமக்கு சொந்தம்இங்கு ஒன்றுமில்லை!
இருந்தும் மண்ணைசொந்தம் கொண்டாடுகிறாய்
இது என்னுடைய எல்லையென்று!
"சமத்துவம்" ஒன்றைத் தவிர
இப்பிரச்சினைக்கு தீர்வு எதுவுமில்லை!