சண்டி ராணி

என்னை பொறுக்கியாக்கின
சண்டிராணியே
சொல்லித்தொலை டி
நீ
மன்மோகன் சிங்கா?
மானமுள்ள நாரயணசாமியா?
பேசாமல் இருந்தும் வாட்டுற
பேசிப் பேசியேக் கொல்லுற
நீ
நல்லவளா?
கெட்டவளா?
புரிந்துகொள்ள முடியாத
அதிமுகவா? தேமுதிகவா?
இல்லை புரிந்ததாய் மல்லுக்கட்டும்
காங்கிரசா? திமுக வா?
உன்னைப் புரிந்து கொள்ள நான்
அக்கினி வேள்வி நடத்தும் பா.ஜ.கவா?
அரசியல் வேள்வி நடத்தும் மதிமுகவா?
நானும் இப்போது
என் மக்களைப்போல
மவுனத்தையே ஆயுதமாய் வேடிக்கை பார்க்கிறேன்.
சொல்லித்தொலை டி
நீ யார்
என்னெஞ்சை பாடாய் படுத்தும்
தேர்தல் துறையா?
புலணாய்வுத் துறையா?

உனக்குப் பிடித்தால்
மகிழ்ச்சி அள்ளிக்கொடுக்கிறாய்
பிடிக்காவிட்டால்
மகிழ்ச்சியைக் கிள்ளி விடுகிறாய்
நீயெனக்கு
நிதித் துறையா?
நீதித் துறையா?

நல்லா பேசிக்கொண்டிருக்கும்போதே
ஒத்தி வைத்துவிடுகிறாய் இல்லை
வெளி நடப்பு செய்கிறாய்
நீ
சட்டமன்றமா?
பாரளமன்றமா?

எழுதியவர் : வாலிதாசன் (20-Oct-13, 2:02 pm)
சேர்த்தது : mukavaivaalidhasan
பார்வை : 73

மேலே