நம்பவைத்த காதல் துரோகம் 555
பெண்ணே...
நீ என்னில் பாதி என்று
வார்த்தையால் சொல்லவில்லையடி...
என்னில் உள்ள
ஒவ்வொரு செல்லும்...
உன் பெயரை மட்டுமே
உச்சரிகுத்தடி...
நீயும் சொன்ன
வார்த்தை...
உதடுகளில் மட்டுமே
சொன்னாயடி...
என்னைப்போல் நீயும்
உண்மையாக நேசிக்கிறாய்
என்றெண்ணினேன்...
நீ பேசும் வார்த்தையெல்லாம்
உண்மையென நம்பினேன்...
நான் செய்த
தவருதானடி...
உன்னை தவிர வேறு
ஒருவளை...
நான் நேசிக்க
மாட்டேனடி...
நீ தந்த வேதனை
என் ஆயுள் முழுக்க...
உன் மனதில் உள்ளதை
மட்டுமே பேச முயற்சி செய்...
நம்பவைத்து ஏமாற்ற
வேண்டாம் பெண்ணே இனியும்.....