யார்? யார் ? யார்?
மனம் கவர் மலரே உனக்கு மணம் தந்தவர் யார்?
தேனே உனக்குள் சுவையை ஒளித்து வைத்தவர் யார்?
காற்றே உன்னைப் புயலும் தென்றலும் ஆக்கியவர் யார்?
விண்ணே உன்னை மண்ணிலிருந்து பிரித்தவர் யார்?
பகலே உன்னை இரவைத் தொட தடுத்தவர் யார்?
நிலவே உனக்கு வெள்ளை அடித்தவர் யார்?
இவையாவும் உணரும் மனிதனே உனக்கு அறிவளித்தவர் யார்?