விஞ்ஞானி

இவர் மண்ணைக் கண்ணாடி ஆக்கியவர்
கண்ணாடியால் நுண்ணுயிர் காண்பித்தவர்
நுண்ணுயிரைத் துளைத்து அணுவை அறிந்தவர்
அணுவை உடைத்து அண்டங்களை அதிரச் செய்தவர்
அதிர்வலை கொண்டு உலகை இணைத்தவர்
இணையும் உலோகங்களைக் கொண்டு பறவைகள் செய்தவர் ...
...எனினும் இவர் படைப்பகள் யாவும்
செய்தவர் அறியா பொம்மைகள்
புரிந்திடும் பற்பல விந்தைகள்
இவையாவும் அறிவியல் உண்மைகள் !

எழுதியவர் : ராஜேஷ் கிருஷ்ணன் (20-Oct-13, 10:38 pm)
Tanglish : vignani
பார்வை : 104

மேலே