பாவலர் செய்குத்தம்பி
வள்ளலார் அருளிய அருட்பாவை இன்று எல்லோரும் படித்து இன்பம் அடைகிறோம். அன்று தமிழறிஞர் கதிரைவேல் பிள்ளை தலைமையில் ஓர் அறிஞர் கூட்டம் நடந்தது. அதில், 'அருட்பா ஆபாசம் நிறைந்த மருட்பா' என்று தவறாக விமர்சிக்கப்பட்டது.
அதைப் பொறுக்க இயலாத இஸ்லாமியரான பாவலர் செய்கு தம்பி ஆதாரத்தோடு பதில் சொல்லி, நாடெங்கும் சென்று அருட்பா மருட்பா இல்லை என்று தன் வாதத்தால் நிலைநாட்டினார்.
அதைக் கண்ட காஞ்சி மக்கள் அவரை யானை மீது அமர வைத்து நகர வீதிகளில் அழைத்து வந்து பெரிய கோவிலில் பூரண கும்ப மரியாதை அளித்து, "பிரசங்கக் களஞ்சியம்" என்ற பட்டம் சூட்டிப் பெருமை சேர்த்தனர்.