விழ்ந்து விடாதே

வீழ்ந்து விடாதே....

தலை வலி, கால் வலி, முதுகு வலி, போன்ற வலிகள் எல்லாம் மருந்து எடுத்துக் கொண்டால் சரியாகி விடும். ஆனால் இந்த காதல் இருக்கிறதே....... மனதை வருடி, ஏமாற்றி பிறகு உடைத்தே விடும். இந்த வலிக்கு மருந்தே கிடையாது. ஏன் இப்படி மாய அன்பில் விழுகிறோம் என்று பார்த்தால் அதற்கு முக்கிய காரணம் நம் பலவீனம்தான். காதல் செய்ய முடிவெடுத்து விட்டேன் என்று யாரும் சொல்ல மாட்டார்கள் அதற்கு பதிலாக காதலில் விழுந்தேன் என்றுதான் சொல்வார்கள். விழுவது என்பது சுய நினைவோடு செய்யும் செயல் அல்ல. அது ஒரு விபத்தைப் போன்றதுதான். இந்த விபத்தில் அகப்படாமல் இருப்பதே வாழ்க்கையை வலியில்லாமல் வாழ சிறந்த வழியாகும். மாய அன்பில் விழுந்துவிட்டால் ஏற்படும் விழ்ச்சியில் சில .......

மைனர் ஜாலி, மணிபர்ஸ் காலி

மாய வலையில் விழ்ந்தால் கொஞ்சம் நஞ்சம் இருக்கும் காசும் செல்போனுக்கு ரீசார்ச் செய்தே தீர்ந்து போகும். காதலரின் பிறந்த நாள் தொடங்கி அவர்களுடைய நாய்க்குட்டியின் பிறந்தநாள் வரைக்கும் பரிசுபொருள்... வாழ்த்து அட்டை... ஏன்? இது தேவையா நாம் இருக்கும் பொருளாதார நிலைமையில்? இப்படி காதலுக்காக தேவையில்லாமல் பணம் செலவழிப்பதை விட நிம்மதியாக 1௦ ரூபாய்க்கு ரோட்டோர கடையில் பஜ்ஜி சாப்பிடுவது எவ்வளவோ மேல். கோபப்படாதிங்க... கொஞ்சம் பொறுமையா கேளுங்க...

சுதந்திரமே பறிபோகும்

இத்தனை நாட்கள் பெற்றோரின் பேச்சு வார்த்தைக்கு கட்டுப்பட்டு நடந்திருப்போம். அது நல்லது. நம் வாழ்வை நல்வழிப்படுத்த உதவும். ஆனால் மாய வலையில் விழுந்த பிறகு, பிறரின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து நடக்க வேண்டும். இவன்கிட்ட பேசாதே... அவகிட்ட பேசாதே.. நீ ஏன் அவளுக்கு போன் பண்ணின... நேற்று ரொம்ப நேரம் போன் பிஸிபிஸி நு வந்தது... யார்கிட்ட பேசின? இப்படி எல்லாவற்றிலும் நம் சுதந்திரம் பறிபோய் விடும். ஆசைப்பட்டு நமக்கு நாமே சூனியம் வைத்துக் கொள்வது போன்ற இந்த மாய அன்பு நமக்கு தேவையா? வேண்டவே வேண்டாம்....
நேர வீணடிப்பு

மாய அன்பில் விழுந்தவர்கள் ஓயாமல் இரவும்,பகலும் காரணமே இல்லாமல் போனில் பேசிக்கொண்டு இருப்பார்கள். இப்படிப்பட்ட நிர்பந்தங்களால் எவ்வளவு நேரம் வீணடிக்கப்படுகிறது. இதெலாம் நமக்கு தேவையா? இப்படி நேரத்தை வீணடிப்பதற்கு பதில் நமது தனித்திறமைகளை வளர்த்துக்கொள்வதில் கவனம் செலுத்தினால் வாழ்க்கையானது பயனளிக்கும்
.
கனவு, லட்சியம், காணமல் போகும்

மாய அன்பில் வீழ்ந்தவர்கள் சுற்றி உள்ள அனைத்தையும் புறக்கணிப்பார்கள், கேட்டால் அது ஒரு உணர்வு. அது அப்படி தான் இருக்கும் என்பார்கள். படிப்பில் கவனம் செலுத்தாமல் இருப்பது வேலை விஷயங்களில் நாட்டமில்லாமல் இருப்பது என வாழ்வின் கனவையும், லட்சியத்தையும் காதலுக்கு அடகு வைக்கும் நிலைமை ஏற்படுகிறது. இப்படி நம் வாழ்க்கையை சீரழிக்கும் இந்த அன்பு நமக்கு தேவைதானா?

“கண்களில் துவங்கி
காகிதத்தில் எழுதப்பட்டு
கனவுகளில் வளர்க்கப்பட்டு
கற்பில் சலனப்பட்டு
கடைசியில் கல்லறையில் முடியும்
காதல் தேவையா?????

எழுதியவர் : செல்வா (21-Oct-13, 5:35 pm)
பார்வை : 176

மேலே