குட்டி முயல்.

அழகான முயல் ஒன்று கண்டேன்
வெள்ளை பனிக்குவியலாகக் கண்டேன்
துள்ளி தாவும் குட்டியைக் கண்டேன்
பஞ்சுப் பொதியலாகக் கண்டேன்
ஓடி ஆடும் அழகைக் கண்டேன்
புல்லைச் சுவைக்கும் பாங்கைக் கண்டேன்
மிரளும் பார்வையைக் கண்டேன்
மிரண்டு ஓடும் நேரம் அச்சத்தைக் கண்டேன்
அழகு முயலின் அழகில் மயங்கினேன்
மயங்கிய நிலையில் மகிழ்வுற்றேன்
மகிழ்ந்த போது என் நிலை மறந்து
பரவசமானேன் குட்டி முயலைக் கண்டு
.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (21-Oct-13, 10:41 pm)
பார்வை : 1688

மேலே