கலையாத நினைவலைகள்

கனத்துப் போனேன் கண நேரம்
நான் நடந்த பாதையை கடந்த போது !

தனிமையில் நான்
நடந்த நாட்களில் என்
கையோடு கை கோர்த்து
கன்னத்துக் குழல் ஒதுக்கி
காதில் கிசுகிசுத்துச் சென்ற
காற்றோடு நான் உரைத்த
ரகசியங்கள் சுமந்து இன்றும்
அலைந்து கொண்டிருக்கிறது
அதே காற்று என்
காலடி தடம் தேடி !!!

எழுதியவர் : thilakavathy (22-Oct-13, 12:04 am)
பார்வை : 78

மேலே