ஆக்கமான கேள்விகளும் அதற்கான பதில் தரும் முயற்சியும் (கார்த்திக் )

முன் எப்போதோ நமது தள உயர்திரு மங்காத்தா அவர்கள் கேள்வி பதில் தளத்தில் கேட்ட கேள்விகள் அதற்கான பதில்களை நான் முன் வைத்தேன் இப்பொது கண்ணில் பட்டது இங்கு வைக்க தோன்றியதால் இங்கு வைக்கிறேன் ........
--------------------------------------------------------------------------

1. அறிவு என்பது என்ன ?

=======இவ்வளவு கேள்வியை தாங்கள் கேட்க காரணாமாய் இருப்பது அறிவு
.
2. உணர்ச்சி என்பது என்ன ?

=======உணர்வு சார்ந்தது .....இந்த பழம் புளிக்கும் என்பது உணர்வு அதனை நினைவில் நிறுத்தி ஏன் புளிக்கிறது என்று ஆராய்ந்தால் அது அறிவு .....

3. அறிவை ஏன் பெருக்க வேண்டும் ?

=======கற்றுகொள்ளும் ஆவல் இருக்கும் எல்லோருக்கும் அறிவு பெருகுகிறது என்பதுதான் உண்மை ......மாறாக அறிவை பெருக்க யாரும் கற்றுகொள்வதில்லை.....கற்றுகொள்ளும் ஆவல் ஏன் பெருகுகிறது என்று வேண்டுமானால் கேட்கலாம் .......பல பரிணாம கோட்பாடு அல்லது பதிவு என்று சொல்லலாம் ........நமது மூளை வடிவமைப்பு அல்லது அதுவாகவே முதிர்ச்சி அடைந்த விதம் நம்மை கற்றுகொள்ளும் ஆவலுக்கு இழுத்து செல்லுகிறது ...ஒரு சிலருக்கு இயல்பாக இருக்கிறது ஒரு சிலருக்கு அந்த ஆவல் காலநீட்டிப்போடு சென்றுகொண்டே இருக்கிறது தலைமுறை என்ற பெயரினிலே ..........

4. உணர்ச்சியை ஏன் அடக்க வேண்டும் ?

=======இந்த பழம் புளிக்கும் என்று ஆராய்ந்து அனுபவித்து சொன்னவரின் மதிப்பதற்காக வந்தது இந்த அடக்குதல் ......தீ சுடும் என்று என் அம்மா சொன்னார் எனது அம்மாவுக்கு அவரின் அம்மா சொல்லிரிருப்பார் என்பதுதான் உண்மை இப்படி வந்ததுதான் உணர்ச்சியின் அடக்குதல் என்று நினைக்கிறேன் .........உணர்ச்சியின் அடக்குதல் என்பது வெறுமனே அடக்குதல் அல்ல ஆராய்ந்து அடக்குதலாக இருக்க வேண்டும்.......எல்லாமே அடக்குதலால் சாத்தியமா என்றால் தெரியவில்லை காரணம் காதல் ,பக்தி பரவசம், தாய்மை பாசம் என்பதும் உணர்ச்சிதான் ....பயம் ,கோபம் ,நெறியற்ற காமம் ,பொறாமை என்பதும் உணர்ச்சிதான் .............தீமையை விளைவிக்கும் உணர்ச்சிகளை அடக்க வேண்டும் ......நன்மையை விளைவிக்கும் உணர்ச்சிகளை வளர்க்க வேண்டும் ..........

5. அறிவை ஏன் அடக்க கூடாது ?

==========அறிவையும் அடக்க வேண்டும் .....சில சமயம் அறிவின் தீமையும் கொடியதுதான் இன்றைய இயற்கை சீரழிவுக்கு காரணம் இந்த முன் யோசனை இல்லாத அடக்குதல் அற்ற அறிவுதான் ......இன்றைய அணுகுண்டின் படைப்பு அறிவை அடக்க தெரியதாதால் வந்த விளைவுதான் .........ஆக்க துறையில் அறிவை செலுத்த தெரிந்திருக்க வேண்டும் ......ஒரு படைப்பு எக்காலத்திற்கும் நன்மையை விளைவிக்குமாயின் படைக்க வேண்டும் அப்படி இல்லாமல் தோன்றிய படைப்பை தூக்கி எறிவது நல்லது .........அறிவு செல்லும் பாதையை பொருத்துதான் ...........தர்மத்திற்கு என்றால் நல்லது அதர்மத்திற்கு என்றால் அடக்குவது நல்லது .........

6. உணர்ச்சியை ஏன் பெருக்க கூடாது ?

==========தாராலமாக பெருக்கலாமே காதல் உணர்ச்சி என்றால் ,பக்தி உணர்ச்சியென்றால் இந்த உணர்ச்சிதான் காதலாகி கசிந்து என்று படைப்பாய் மலரும் என்று நினைக்கிறேன் ..........

7. அறிவின் கட்ட நிலைகள் எவை?
(தாழ்ந்ததில் இருந்து உயர்ந்தது )

========சின்ன சின்ன கேள்விகளில் தொடங்கி இறுதியாக நான் யார் ?என்று இயல்பாக அறிய முயலும் நிலைகளே அறிவின் இறுதி கட்ட உயர்ந்த நிலை ...அந்த கேள்விக்கு பதிலை எட்டுவதே அறிவின் இறுதி நிலை ......

8. உணர்ச்சியின் கட்ட நிலைகள் எவை?
(தாழ்ந்ததில் இருந்து உயர்ந்தது )

=======பூரண அமைதியை நோக்கி பயணிக்கும் உணர்ச்சிகளே உயர்ந்த நிலைகள் அதுதான் உணர்ச்சியின் இறுதி கட்ட நிலை .........

9. பகுத்தறிவு என்பது என்ன? அது ஏன் உயர்ந்தது என்று கருதப்படுகிறது?

=======அடுத்தவரின் படைப்பையும் பகுத்து ஆராய்வதால் பகுத்தறிவு என படுகிறது ......தனித்தன்மையோடு விளங்குவதால் உயர்ந்தது என கருதப்படுகிறது (அதாவது ஆமாம் சாமி போடாமல் புரிந்துகொள்ள முயலுவதால்)

10. அன்பு என்பது உணர்ச்சியா அல்லது பண்பா?
========அன்பு என்பது அன்புதான் உணர்ச்சியும் அல்ல பண்பும் அல்ல ......... இந்த உலகத்தில் மனிதர்களே இல்லாவிட்டாலும் அன்பு இருக்கும் .......அவ்வளவு ஏன் இவ் வுலகமே இல்லாவிட்டாலும் அன்பு இருக்கும் ..........அன்பு என்பது விடைதர இயலாத ஒன்று அனுபவத்திற்கு அப்பாற்பட்டது என்றே நினைக்க தோன்றுகிறது .....

11. அன்பு ஏன் உலகிலேயே உயர்ந்ததாக கருதப்படுகிறது?
========சர்வ சுதந்திரமாக ,தனித்தன்மையோடு திகழுவதால் உலகிலேயே உயர்ந்ததாக கருதப்படுகிறது..........

மிக்க நன்றி

என்றென்றும்
அன்புடன்
கார்த்திக்

எழுதியவர் : கார்த்திக் (திருநெல்வேலி ) (21-Oct-13, 11:04 pm)
பார்வை : 179

மேலே