வாடும் இலைகள் ...
இலையே இலையே
வாடி ஏன் நிற்கின்றாய்
இலையே இலையே
நிலை குலைந்தே
ஏன் நிற்கின்றாய்
அன்றுனைக் கண்டேன்
பச்சை நிறத்தில்
பளபள வென்ற
புடவை ஒன்றை, நீ
அணிந்திருந்தாய்
பச்சிளம் குழந்தையும்
பார்த்து உன்னை, தன்
பிஞ்சுக் கரங்களால்
பிடித்திடத் துடிக்க
வெற்றிலை இட்ட
வாயின் எச்சிலை
உன்மேல் சிலபேர்
துப்பிட நீயும்
கயவர் கையில்
சிக்கிய கனிபோல்
கற்பினை இழந்தாய்
எனக் கருதிநீ
கருகிடலாமோ
அற்பர்கள் பலரும்
சட்டத்தின் துணையால்
சுற்றிடல் கண்டோ
துவண்டுநீ விட்டாய்
ஆழ்கிணர் வெட்டி
நிலத்தடி நீரை
உறிஞ்சுதல் மூலம்
உன் அடிவேரும்
ஆங்கு சென்றிடல்
இயலாதென்றோ
வாடி மடிந்திட
முன்வந்தாயோ
உன் நிலை கண்டு
என் மனம் இன்று
துடிப்பதை நீயும்
உணர்ந்திடுவாயோ
விளக்கம் : வாடும் இலைகள் = பாலியல் பலாத்காரத்திற்கு பலியானவர்கள்
வெற்றிலை எச்சில் துப்பிய கயவர் = பாலியல் பலாத்காரம் செய்த கயவர்கள்