உணர்வுகள்,,,,

உணர்வுகள்,,,,

முற்றத்தில் ஊஞ்சல்கட்டி ஆடிக்கொண்டிருக்கும் நிழலை இரசித்தபடி அறிவை ஊமையாக்கிய நிலவிற்கு தெரியவில்லை ,,, அதன்பால் கைத்தாங்கலாக நெருங்கிய வால் நட்சத்திரத்தை,,,

நிழலை விழுங்கிய பின் நிஜத்தையும் பருகிக்கொண்டே போகிறது

வெளிச்சம் தின்றுக்கொண்டே இருப்பதை கைய்யில் நுனிப்புல்லை கிள்ளி எறிந்த வண்ணம் திசைப் பிசகாமல் வெறித்திருந்தான் அவன்

உள்ளுக்குள் சேமித்திருந்த பதில்களை தீர்மானிக்கமுடியாத மனநிலையால் கேள்விகளுள் புதைபோன வண்ணம் எதை தேடுகிறான்???

காத்திருப்புகளுக்கான விதிமுறைகள் எனப்படுவது புதருக்குள் பதுங்கிக் கொண்டிருக்கும் மிருகத்தைப்
போல் வெளி வரவுக்கான சமய சந்தர்பங்களை
சார்ந்தே அமையப்படுகிறது என்பதை அறிய மறுக்கிறவனாய் எட்டிட முடியாத உயரத்தில் உயரமறியாத ஏணியை வைத்து அவசரத் தொடுதலுக்கு தொடுவானம் இசைந்துக்கொடுக்கவில்லை யாதனால் விரகத்தி வலையில் தன்னைத்தானே பின்னிக்கொள்ளுகிறான் அவன்

உறக்க நெரிசலில் எதிர்க்காற்று நுழைந்து புறத்தெறிக்கும் கரியமில வாயூவை ஆட்சி செய்கிறது, நெஞ்சாங்கூட்டில் தேங்கிக்கிடக்கும் நிகழ்ந்தவைகளெல்லாம் அவைகளையும் நகர்த்தி,, கனவுக் கூட்டிற்குள் குடிபுகவே கற்பனைத் திரை கயிறுக் கூட்டங்கள் ஊசிக்குள் தஞ்சம் கொள்ள

ஒன்றைவிட ஒன்று போட்டியிட்டப்படி அவன் நிரந்தர உயிர்விதைப்புகளுக்கொரு வெற்றுப் பைய்யை தயார் செய்துக் கொண்டிருக்கிறது

அதோ அங்கே நடுக்கடலில் நட்ச்சத்திரத் துளிகள் விழுகிறது அங்கிருந்த இளஞ்சோலை மரங்களுதிர்த்த இலைச் சரடுகளின் மேலே மெல்லியத் தீப்பொறித் தீண்டவே ஒரு தேவதை உருவாகிறாள்

நெருப்புக் கோள்களால் ஆன ஐம்புலன்களுடன் மெதுவாக நகரும் அத்தேவதையின் அசுர உருவம் அதிகரித்துக் கொண்டே வருகிறது

கண்முனை உணர்வுகளை வாடகைக்கு விட்டதனாலோ என்னவோ உதடுகள் பிரிந்தும் பற்கள் கட்டப்பட்டிருந்தது அவனின்

மூளைக்கும் மூக்கிருள் துவாரத்திற்கும் இடையே இறுக்கம் இருந்துக்கொண்டே இருக்கிறது நாற்காலியிட்ட வண்ணம்,,,

சுவாசிக்க முயலுகிறான்,,,, சிரிக்கிறது சுவாசத்தைப் பிடித்தபடி அவ்விறுக்கம்,,,,,

அனுசரன்

,

எழுதியவர் : அனுசரன் (22-Oct-13, 11:46 pm)
பார்வை : 209

சிறந்த கவிதைகள்

மேலே