வெற்றிடமாய் ஓர் வாழ்வு வேண்டும் !!!

எத்தனை இரவுகள் ஒன்றுகூடி
அழுதாலும் தொலைத்த
நிஜங்களைப்போலவே ஜீவிதம்,

மனசு வெடித்துச்சிதருகிறபோதும்
வார்த்தைகள் உள்ளுக்குள்
மௌத்தாக்கிப்போகிறது,

கோடி உணர்வுகள்
கட்டி வைத்திருக்கிறேன்,
காயப்பட்ட இதயத்தின் அருகாமையில்.

வெற்றிடமாய் ஓர் வாழ்வு
வேண்டும்,,, நின்மதி ஊற்றி
நிரப்புவதற்க்காய்.

இப்போதெல்லாம் மனசு
நேசிக்கும் ஒரே நொடி
மரணம் பற்றித்தான்.

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (23-Oct-13, 1:08 am)
சேர்த்தது : ifanu
பார்வை : 77

மேலே