ஏங்கும் மனம்...
ஆலமரத்து விழுதுகள் - அலை
ஆடித்திரிந்த கடற்கரைகள்
சோலைவனத்து பசுங்கிளிகள்
சொக்கும் அழகு மலரரும்புகள்
ஆலைக்கரும்பின் அடி இனிமை
காலை சூரியக்கதிரின் இளமை
மாலை மயங்கும் அடிவானம் - நீர்
வானை எட்டும் தொடுவானம்
கூடித்திரிந்த வயல்வெளிகள் - நாம்
ஓடிமகிழ்ந்த பனந்தோப்புகள்
ஆனையுண்ட விளாம்பழம்போல்
அவையாவும் இழந்து கோதாய் நான்
மாடிவீட்டு ஜன்னல்களும் - முடி
வானை முட்டும் மாளிகைகளும்
நேரமில்லா நெடுஞ்சாலைகளும்
நெஞ்சமில்லா மனித ஜென்மங்களும்
வாழுமிந்த பூமியிலே
வார்த்தைக்கேனும் அன்பு ஏது???
கோடிகொடுத்தாலும் கொட்டிக்கொடுத்தாலும்
கிடைக்குமா - அந்த
கூடிவாழ்ந்த வாழ்வின் சுகம்...!