- மனிதனில் குறிசுடும் மிருகங்கள் -

கரயில்க்கரையும் நம்மவர்
பெண்டிர் மானம்
ஆட்கொல்லிகள் அலையும்
அலையன்னை மடி

தரயவள் தாயென்பதை உணர்த்தும்
அடைக்கல அகழிகள்
மூதடி கொட்டகைகள்
தென்றலவளை கண்டும் அஞ்சும்

சிலவேளை பருப்பும் அமிர்தமாகும்
சோறும் உப்புக்கும் அவசியமில்லை
மண்மூட்டைகளான அம்மாவின் சேலைகள்
மண்ணைவிட உணவில்லை

ரொட்டியுடன் கருகும் தரப்பாள்கள்
அண்ணாக்காவின் ஒழித்து பிடித்து விளையாட்டுக்கள்
சரசம் அல்ல சாவுக்கு பயந்து
சீனிக்கு விலைபோன சாவு

பிள்ளைப்பசி தீர்க்க பால்மா பெட்டி
போனதந்தைக்கு கிடைக்கவில்லை சவப்பெட்டியும்
குண்டடி பட்ட மட்டுக்காய் ஆலாயப்பறக்கும்
ஆறறிவு காகங்கள்

பிள்ளைக்கு விலையான தாலிகள்
மனிதனில் குறிசுடும் மிருகங்கள்
வேட்டோசை தாளத்தில் தூக்கம்
கேக்குது இப்பவும் வெடியோசை

இலவச ஐயோக்கள் அகழிக்குள்
பிரசவிக்கும் பிரசவ அறை
சிலருக்கு பிணவறையாகவும்
தொப்பிள்க்கொடியறுத்து முடிய
ஆள் வேணுமாம் அலறல் ....

உங்கள் அன்பு விதுஷன்

எழுதியவர் : விதுஷன் (23-Oct-13, 6:21 am)
பார்வை : 73

மேலே