சாதலும் காதலில் முடிவல்ல

அணுவணுவாய் என்னை அழிக்கின்ற அழகியே
உன்னினைவால் நானோ அழுகிறேன் மனமுருகியே
வாளெடுத்து வீசும் பார்வை உன் விழியே
அதில் பலமுரைனான் வீழ்ச்சி கண்டேன்
உன்னிடையே
கசிகின்ற கண்ணீர் துளி சொல்லும் அடிக்கன்னே
நான் கசிய பெரும் காரம் நீதானெனக்கன்னெ
தோள்மீது முகம் சாய்த்து அணைப்பாய் என் அன்பே
என் தோளிரண்டும் துவண்டதடி உன்
பிரிவிற்கு பின்பே
மரணத்தை நோக்கும் ஒருநொடிக்கு முன்பே
சிரிக்குமுந்தன் முகத்தை நான் பார்க்கவேண்டும்
கண்ணே..

எழுதியவர் : செ.காமேஷ் வரன் (24-Oct-13, 9:09 pm)
பார்வை : 169

மேலே