எழுத்திற்கும் சக நட்பிற்கும் நன்றிகள்

பருவம் தொட்ட நாள் முதலாய்...
காதலித்தேன் கன்னி தமிழை!!
நேசித்தது தமிழென்றேனும்...
நிதம் முகம் மாறும் தரணியிலே!!!

"வல்லனவற்றில் வாழ்வன நிலை பெரும்"
எனும் டார்வின் கோட்பாட்டின்படி!!
நானும் நிர்பந்திக்கபட்டேன்..
தமிழை விட்டு கணினி தட்ட!!!

தனி மனித வாழ்வின் தரம்!
பணமெனும் அளவுகோலால்...
நிர்ணயிக்கப்படும் சமூகம் தனில்..
யானும் அவர்களில் ஒருவனாய் மாறினும்!!!

தமிழ் பித்து ஏறிய என் மனதின்..
சிற்சில மழலை பிதற்றல்களை பகிரவும்!
அன்பு நட்புக்களின் கவியை ரசிக்கவும்
உலா வருகின்றேன் எழுத்து உலகிற்கு!!!

குயில்கள் உந்தன் கவி கண்டே!!
கொஞ்சும் தமிழின் சுவை அறிந்தேன்!
நட்பே நும் வாழ்த்துக்களால் உளம் மகிழ்ந்தேன்!
நின்றன் சுட்டுதலால் சுடரப் பெற்றேன்!!

எழுத்திற்கும் சக நட்பிற்கும் நன்றிகள்!!!

எழுதியவர் : பிரபு பாலசுப்பிரமணி (26-Oct-13, 1:00 am)
பார்வை : 252

மேலே