காதல் பிஞ்சு
காதலன் காதலியிடம்
நினைக்க தெரிந்த மனமே
உனக்கு மறக்க தெரியாத
காதலி காதலனிடம்
அணைக்க தெரிந்த மனமே
உனக்கு மணக்க தெரியாத
இவர்கள் உறவின் பால் பிறந்த குழந்தை
என் சோக கதையே கேளுங்கம்மா
தாய்குலமே அம்மா தாய்குலமே
காதலன் குழந்தையிடம்
நினைத்ததை முடிப்பவன்
நான் நான் நான்
காதலி குழந்தையிடம்
கண்ணே கண்மணியே
என் கற்பை காப்பாயா
நீ என்னை மறப்பாயா
சமுகம்
போனால் போகட்டும் போடா
உனக்கு தொட்டில் குழந்தை உள்ளதடா
அண்ணன் தம்பி சண்டை இட
அக்கா தங்கை அன்பு காட்ட
நல் மனம் படைத்தோர் நன்கொடை தர
அனாதை இல்லம் பல உண்டு
கலங்காதே என் கண்ணா கலங்காதே
நாய் பேணி காக்கும் தன் குட்டியே
காக்கை கூட கரைந்து கரைந்து காக்கும்
ஆறு அறிவு மனிதனுக்கு தன்னை
காப்பது பெரும் காக்கல்.