படிக்காதீங்க புரியாது

யானை கூவட்டும்
கோழி பிளிறட்டும்
பூனை உளையிடட்டும்
நரி மியாவ் சத்தமிடட்டும்

தொலைவில் நான்
தொலைந்து போகிறேன்
செவியில் எதையும் கேட்காமல்..
ஐய்யயோ
எனக்கு ஏன் இந்த வம்பு ?

காகம் குரைக்கிறது
நாய் கரைகிறது
மீன் ஆடுகிறது
மயில் நீந்துகிறது

கடல்தாண்டி நான்
காணமாலே போகிறேன்
பார்வையில் எதையும் ரசிக்காமல்...
ஐய்யயோ
எனக்கு ஏன் இந்த வம்பு ?


அச்சச்சோ......!
உனக்கு என்ன ஆச்சு ?
என்கிறது உலகம்
ஆமா! நீ ஏன்
தலைகீழாய் ஆடுகிறாய் ?
என்றேன் நான் ...
போதையில் ..
குடி போதையில்..

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (26-Oct-13, 3:43 pm)
பார்வை : 596

மேலே