`பச்சோந்தி` நட்புகள்

எப்போதும் இலக்கியச் `செல்வாக்கு`
சொல்லியே நகரும் பொழுதுகளில்
புகழெனும் அதி உச்சியில் பறக்க
மலர்விட்டு மலர் தாவுகின்றன
பெரும் போதையேறிய வண்டுகள்..!

புள்ளிகளால் அழகு கோலம்போட
நல்ல உண்மை நட்புகளையும்
நாணமின்றி விலை பேசி,
முகஸ்துதிகளும் தம்பட்டங்களுமாய்
கரைந்துபோகிறது பொற்காலம்....!

ஒருகையில் எழுதுகோலும்
மறுகையில் அரிவாளும்கொண்டு
எழுத்துலகில் அரவமின்றி நுழைந்த
சில `ஆதாயப்` படைப்பாளிகளால்
தலைகுனிந்து நிற்கின்றாள் இலக்கியத் தாய்..!

வெட்ட ஆட்கள் கிடைக்காதபோது
அவளையும் வெட்டுவதற்காய்
அலைந்துகொண்டிருக்கும் கும்பலில்
`சுயநலம்` மட்டுமே எப்போதும்
கோலோச்சுகிறது முன்னணியில்...!

தம் எழுத்தால் உலகம் மாறுவதாய்
பலருள்ளும் பல்வேறு கற்பனைகள்....
ஆனாலிங்கு அவர் தம் `எழுத்தால்`
புகழ் ஏணியில் ஏறிப் பறக்கவே
விரும்புது அவரவர் நிதர்சன உள்ளம்..!

`ஆயிரம் பேரை நண்பர்களாய்
வைத்திருப்பது பெருமையல்ல.......
ஆயிரம் பேர் எதிர்க்கும்போது
நண்பனுக்காக அவர்களை எதிர்க்கும்
உண்மை `நண்பன்` ஒருவனை
வைத்திருப்பதே எப்போதும் மேலானது`

எங்கேயோ வாசித்த வரிகள்
காரணமறியாமல் என்னுள்ளே....
நட்பின் வலியால் மனதிலிருந்து
மிதந்த ஞாபக வரிகளுடன்
எல்லாமே மறதியாக போகட்டும்...!!
-------------------------------------------------------------------
தோழி துர்க்கா

எழுதியவர் : தோழி துர்க்கா (26-Oct-13, 2:43 pm)
சேர்த்தது : தோழி துர்க்கா (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 438

மேலே