ஒரு விரலாய் மறு மொழியாய் இருப்பாயடாதொடர்-17---அகன்
உதித்து எழும் ஆதவன் போல் இதழ் விரி
குதித் தோடும் நதி நீராய் பாதம் பதி
மதித்து வணங்கிட குவியும் கரங்களாய் இரு
சிரித்து மகிழும் நாவால் அன்பே என்றுரைத்திரு
மண்புகழ் பா உரையில் மயங்காதே -விரி
விண்விளிம்பே உன் எல்லை ,விரி உன் செயலை.
உன் முகங் காணுகையில் என்னுள்ளத்தில் புகும் உன்மத்த வெறிவீச்சில் ஏகாந்தம் என் இல்லத்தில்
குமிழிடும் உன் சிரிப்புக்குள் குவலயம் அடங்காது
இமியேனும் இடர் உனக்கினில் தாங்காது இந்நிலம்
மழலை மொழி மயக்கும் போதையோ சொல் நீ
தமிழை மிஞ்சும் சுகம் பின்னெப்படி உன்னுரையில்
உலகம் முழுதும் உன் உறவு .அன்பு கொள்
நிலப்பரப்பு எங்கும் மனிதர் வீடு .வாழ்ந்திரு..
(தொடரும் )