தீபாவளியில் மகிழ்ச்சி தீபமேற்றுவோம்

எண்ணெய் குளியலில்
பாவங்களை கழுவி புண்ணியம்
தேடுவதல்ல தீபாவளி

பசியில் வாடும் வயிற்றையும்
குப்பையாகும் குழந்தையையும்
வாழ வழிவகுப்பதே தீபாவளி !!!


வெடிகளை வெடித்து
ஒசோனை உருக்குலைய
வைப்பதல்ல தீபாவளி

ஜாதி மதத்தை பொசுக்கி
தேசம் நிமிர நல்வழியில்
பாடுபடுவதே தீபாவளி !!!


நல்லவன் கெட்டவன்
நண்பன் எதிரியென்று பாகுபடுத்தி
கொண்டாடுவதல்ல தீபாவளி

தீயவனை திருத்தி
விரோதியை நட்பாக்கும்
ஒற்றுமை ஒளியே தீபாவளி !!!


அயலர் கலாச்சாரத்திற்கு
அடிமையாகி நவீனமாக
விழாயெடுப்பதல்ல தீபாவளி !!!

பண்பாட்டினை பாதுகாத்து
புண்ணிய ஆத்மாக்களை
வணங்குவதே தீபாவளி !!!


மதுவருந்தி வீட்டிலும்
நாட்டிலும் வன்முறையை
வளர்ப்பதல்ல தீபாவளி !!!

மனித குலத்தை ஒன்றாக்கி
சண்டையின்றி சந்தோசமாக
வாழ்வதே சிறந்த தீபாவளி !!!

புத்தாடையில் வீ டெங்கிலும்
தீபமேற்றி விழாக்கோலம்
பூணுவதல்ல தீபாவளி

மன அழுக்கையெல்லாம் அகற்றி
தன்னம்பிக்கை நெய்யிலே
மகிழ்ச்சி தீபமேற்றுவதே தீபாவளி !!!



எனது அம்மா மற்றும் தோழிகள் ,தோழர்கள் சார்பாக உங்களுக்கும் உங்களது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!!

எழுதியவர் : சுதா (27-Oct-13, 12:10 am)
சேர்த்தது : சுதா (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 2286

மேலே