கழுதை கெட்டால் குட்டிச்சுவரு

புற்களில் இரு வகை.

ஒன்று கற்பூரப்புல். கற்பூர வாசனை உள்ளதால் அதற்கு அப்பெயர்.

மற்றொரு வகைப்புல். கோரை எனப்படுவது. கோரை புல்லிற்கு "கழு" என்ற பெயரும் இருந்தது.

சங்க காலத்தில் நம் முன்னோர்கள் படுக்க பாய் மட்டுமே பயன்படுத்தினார்களாம்.

கற்பூரப்புல் கொண்டு தயாரிக்கப்படும் பாய்களில் கற்பூர மணம் இருக்குமாம். கழுப்புல் பாய்களில் மணம் இருக்குமா?

கழுதை என்ற சொல்லினை பிரித்திடின் கழு + தை என்று வரும்.

ஒருவேளை அவர்கள் கோரைப்புற்களால் நெய்யப்பட்ட பாய்களை கழுதை என்று குறிப்பிட்டிருக்கலாம் என்று என் மனதிற்கு தோன்றுகிறது. அப்படியானால், கிழிந்து (கெட்டு) போன கழுதைகளை குட்டிசுவற்றின் மீது போட்டு விடுவார்களோ .. என்னவோ. அதனால் கழுதை கெட்டால் குட்டிச்சுவரு .. என்ற பழமொழி நடைமுறையில் தோன்றி இருக்கலாம் என்பதே என் கருத்து .

எழுதியவர் : (27-Oct-13, 11:32 am)
பார்வை : 189

மேலே