உனது கவிதையில் சிலரது உயிர் முடிச்சு

உனது எழுத்து
சிலரின் உயர்வுக்கு
படிக்கற்கள் என்றானால்
அது கவிதை ..!!!

உனது சொற்கள்
சிலரின் வாழ்க்கையை
விசாரித்தது எனில்
அது கவிதை...!!!

உனது வரிகள்
சிலரின் வருத்தத்திற்கு
விடை என்றானால்
அது கவிதை...!!

எழுத்துக்கள் பழமாய் இருந்தால்
விதைகள் அதனுள்ளே..
சருகாய் இருந்தால்
வெற்று சலசலப்பு மாத்திரமே..

உனது கவிதைகள்
சிலரை உள்வாங்கி நின்றால்
அவர்களின் உயிர் முடிச்சு
உனது எழுத்திலும் சொல்லிலும் !!!!

அப்போது உனது வரிகள்
புகழ் வளையங்களாய் உனக்கு...!!!!

எழுதியவர் : அகன் (30-Oct-13, 9:28 pm)
பார்வை : 142

மேலே