காதலில் சாவுமணி

அவன் அறிவில்
ஆடம்பரத்தில்
வார்த்தைகளில்
தம்மைப் பறிகொடுத்த
அழகுக் குமரியர்
இன்று அலங்கோலமாய்...!

வார்த்தையில் கனிவுண்டு
உள்ளத்தில் நஞ்சுண்டு
அறிந்து விலகியவர்
பத்திரமாய் கற்புடன் ..........!

மெய்மறந்த படித்தவரும்
விசாரித்தறியா
பாழ்பட்ட காதலால்
மீண்டு வரமுடியா
ஆழமான புதைகுழியுள் .....!

ஒன்றல்ல இரண்டல்ல
நூறு மனைவியர் .......
எல்லாமே படித்த பெண்கள்...!
பத்திரிக்கை செய்தி பார்த்து
அதிர்ந்து போனேன்......
எப்படி வசீகரித்தான்
அப் புத்திகெட்ட மங்கையரை
வார்த்தை ஜாலங்களால் என்று ..!!!

எழுதியவர் : சுசானா (வீரம்) (31-Oct-13, 6:36 pm)
பார்வை : 103

மேலே