susaana - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  susaana
இடம்:  chennai
பிறந்த தேதி :  10-Aug-1975
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  18-Oct-2013
பார்த்தவர்கள்:  2250
புள்ளி:  175

என் படைப்புகள்
susaana செய்திகள்
susaana - சித்ராதேவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Mar-2014 5:23 pm

விதவை
விபச்சாரி
மலடி
வாழாவெட்டி
முதிர்கன்னி ்
என்ற பெண்பாலுக்கு
இணையான ஆண்பால் வைக்காமல் அநியாயம் செய்தது
இந்த உலகம்
இதுவனைத்தும்
பெண்ணிற்கு மட்டுமே பொருந்துமா?
ஆணிற்கும் பொருந்துமெனில்
எழுதிடுங்கள் புதியதோர்
அகர முதலி
இல்லையேல் கிழிதெறியுங்கள்
உங்கள் அகம் பிடித்த
அகராதியை.....!

மேலும்

தாங்கள் இவற்றை பிறர் பயன் படுத்தி கேட்டதுண்டோ? கருத்தை கூட நயத்துடன் கூற வேண்டும் தோழமையே.... 09-Mar-2014 8:13 pm
அறியாமல் இருப்பது உங்கள் தவறு. தமிழ் மொழியின்படி அதுதான் இணைச்சொல், எதிர்ப்பால்...!! அத்தகைய சொற்களை ஆண்கள் கையாளாமல் இருப்பதும் ஒருவகை ஆணாதிக்கமே...! நான் சொன்ன கருத்தையே உங்களால் ஏற்க முடியவில்லை. பின் அகராதி எதற்கு ..!! 09-Mar-2014 6:30 pm
நல்ல கருத்து தோழமையே. பெண்ணியம் பேசுவோர் முதலில் தம் பெயரோடு கணவன் பெயரையும் சேர்த்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். எந்தக் கணவனாவது தன் பெயருடன் மனைவி பெயரைச் சேர்த்துக் கொள்வதைப் பார்த்திருக்கிறீர்களா? 09-Mar-2014 6:25 pm
தபுதாரன், மலடன், விலைமகன் போன்ற வார்த்தைகள் வழக்கொழிந்து விட்டதே.... யாரும் பயன்படுத்தி நான் கேட்டதில்லை 09-Mar-2014 6:17 pm
susaana - வித்யாசந்தோஷ்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Mar-2014 9:00 pm

புறாக்கூண்டினுள் புத்தனாகிறேன்

புழுதிக்காடுகளின்
தூசுகளை போல
இன்றைக்கெல்லாம்
என் மூச்சோடு
கலந்து விட்டாய்........!

என் தனிமையில்
நீ நுழையும் போது,
எப்படி நான் இருக்கின்றேன்.?
எப்படி இருந்தேன்....?
எப்படி இருக்க போகிறேன்....?

எனக்காக இன்னுமின்னும்
காத்திருக்கும்
அதிர்ச்சிகள் தான்
என்ன......?

எதுவாக நான்
இருக்க போகிறேன்.....?

திருடனா......?
கொலைகாரனா....?
பிச்சைக்காரனா...?
வழிப்போக்கனா......?
நீ கதவு
திறக்கும் போது.......?

இந்த தனிமை
மீண்டும் மீண்டும்
என் மீது
போர் தொடுத்து
கொண்டிருக்கிறது........?

இந்த வெறுமை
என்னை கொள்ளாமல்
கொன்று கொண்டிரு

மேலும்

நன்றி தோழமையே......! 10-Mar-2014 6:11 pm
அருமை அருமை 10-Mar-2014 5:52 pm
கண்டிப்பாக முடியாது தோழமையே.......! அதனால் தான் அவன் அழுது கொண்டிருக்கிறான். 09-Mar-2014 12:53 pm
தனிமையிலே இனிமை காண முடியுமா...? படைப்பு சிறப்பு.... 09-Mar-2014 12:44 pm
susaana - நெல்லை ஏஎஸ்மணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Mar-2014 12:15 am

உருவான நாள் முதலாய்
கருவறையில் காத்திருப்பு. . .

வெளியான நேரம் முதல்
துளிப்பாலுக்காய் காத்திருப்பு. . .

தமையன் வைக்கப் போகும்
பொம்மைக்காய் காத்திருப்பு. . .

வந்தவுடன் அணைத்து மகிழும்
தந்தைக்காய் காத்திருப்பு. . . .

துள்ளி விளையாட தினம்
நட்புக்காய் காத்திருப்பு. . . .

பள்ளி செல்ல வகையான
பேருந்துக்காய் காத்திருப்பு. . . .

அள்ளிக் கல்வி தரும்
ஆசானுக்காய் காத்திருப்பு. . . .

தள்ளி நின்று நகையும்
காதலுக்காய் காத்திருப்பு. . . .

கெட்டி மேளம் கேட்க
பட்டுடனே காத்திருப்பு. . . .

பள்ளி அறை தன்னில்
பாங்குடனே காத்திருப்பு. . .

மருத்துவமனை இருக்

மேலும்

மிக்க மகிழ்ச்சி தோழமையே. 06-Mar-2014 12:38 am
காத்திருந்தேன் காலமெல்லாம் காதிரூந்தேன் எனும் இனிமையான பாடல் வரிகள் நினைவுக்கு வருங்கின்றன தங்கள் இனிமை வரிகளால். 06-Mar-2014 12:20 am
உண்மைதான்.நன்றி தோழமையே. 05-Mar-2014 6:12 pm
வட்டாட்சியர் அலுவலகம் சென்றிருந்தபோது தோன்றியது.நன்றி தோழமையே. 05-Mar-2014 6:11 pm
susaana - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Feb-2014 5:47 pm

நட்புக்கரம் நீட்டிவிட்டு
நஞ்சைக் கொடுக்காதே

நட்புக்கொள்ளுமுன்
ஆயிரம்தடவை யோசி.

நட்புக்கொண்டபின்
உண்மையன்புடன் நேசி..!!

மேலும்

susaana - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Dec-2013 4:20 pm

கண்ணே ராஜா
மணியே மாணிக்கமே
உன் புன்னகையில்
உலகை மறந்தேனே....!

தவழும் வயதிலேயே
புன்னகை மாறாமல்
கற்றுக்கொள்
அனைத்தையும் முத்தே..!

உண்மையைப் பேசி
நல்லதை நினைத்து
நீ வாழ வேண்டும்
அரிச்சந்திரன் போலவே...!

தீமையை ஒழிக்க
நெருப்பாக வேண்டும்
பார் போற்றும்
பாரதிபோல் என் விழியே..!

பெண்களை மதிக்க
இப்போதிருந்தே
கற்றுத் தரவேண்டும்
என் செல்லமே உனக்கு.!

ஒன்றில் இருக்கும் நீ
ஐந்திலேயே வளைந்துவிடு
இல்லாவிட்டால்
ஐம்பதிலும் வளையமாட்டாய்..!

கண்ணே ராஜா
மணியே மாணிக்கமே
உன் புன்னகையில்
உலகை மறந்தேனே....!!!!!!!!
============================================

மேலும்

susaana - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Dec-2013 5:39 pm

காதலியே...காதலியே
என் இதயத்தைப் பாரடி
என்னிதயமே நீயாக
பித்தம்கொள்ள வைக்குதடி
இரக்கம்கொண்டு கேளடி
உன் இன்ப ராகம் நானடி.....!

பூவும் பார்த்து சிரிக்குதடி
புயலும் நின்று போச்சுதடி
காதல்கொண்ட எனக்கு
உன்னை நினைக்கும் போதெல்லாம்
இன்பச் சாரல் எனக்குள்ளே
இனிதாய் தீண்டிச் செல்லுதடி...!

உன் விழி பார்க்கையிலே
என்னை மறக்கின்றேன்...
உன்னோடு பேசுகையில்
நீல வானில் பறக்கின்றேன்...
எனை விட்டு நீ சென்றால்
பனியாய் கரைகின்றேன்.............!

காதலியே...காதலியே
என் இதயத்தைப் பாரடி
என்னிதயமே நீயாக
பித்தம்கொள்ள வைக்குதடி
இரக்கம்கொண்டு கேளடி
உன் இன்ப ராகம் நானடி.....!
---

மேலும்

susaana - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Dec-2013 3:35 pm

நகைச்சுவைக் காட்சிகளில்
சந்தர்ப்ப வசத்தில்,
நகைச்சுவை நாயகனை அடிக்க
சம்பந்தம் இல்லாமலே
சுற்றியுள்ளவர் எல்லாம்
அணி திரளுவார்
ஒருவனைப் பிரித்து மேய்வதற்கு..!

எங்கோ இருக்கும் கோபத்தை
எங்கோ காட்டிவிட்டு
வீரம் காட்டிவிட்டதாய்
செருக்குடன் விடைபெறுவார்
இயலாமையோ, அறியாமையோ
பொறாமையோ ஏதோ ஓர் ஆமையுடன்..!

கும்பலாய் சேர்ந்து அடிப்பதில்
அதிலொரு சந்தோசம் அவர்களுக்கு....
அவ்வளவு வலிகளையும் தாங்கி
மீண்டும் வெற்றிநடை போட்டு
மீண்டு வருவார்
நம்ம நகைச்சுவை வீர நாயகர் ...!

ஒற்றைக்கு ஒற்றை
அதுதானே வீரம் .....
அடியாள் சேர்த்து
கும்பலில் கோவிந்தா
அதிலென்ன நியாயம் ... ..

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

sivagiri

sivagiri

திருவண்ணாமலை
a.lawrence

a.lawrence

தூத்துக்குடி

இவர் பின்தொடர்பவர்கள் (2)

a.lawrence

a.lawrence

தூத்துக்குடி
sivagiri

sivagiri

திருவண்ணாமலை

இவரை பின்தொடர்பவர்கள் (2)

a.lawrence

a.lawrence

தூத்துக்குடி
sivagiri

sivagiri

திருவண்ணாமலை
மேலே