என் இதயம் பேசுகிறது

காதலியே...காதலியே
என் இதயத்தைப் பாரடி
என்னிதயமே நீயாக
பித்தம்கொள்ள வைக்குதடி
இரக்கம்கொண்டு கேளடி
உன் இன்ப ராகம் நானடி.....!

பூவும் பார்த்து சிரிக்குதடி
புயலும் நின்று போச்சுதடி
காதல்கொண்ட எனக்கு
உன்னை நினைக்கும் போதெல்லாம்
இன்பச் சாரல் எனக்குள்ளே
இனிதாய் தீண்டிச் செல்லுதடி...!

உன் விழி பார்க்கையிலே
என்னை மறக்கின்றேன்...
உன்னோடு பேசுகையில்
நீல வானில் பறக்கின்றேன்...
எனை விட்டு நீ சென்றால்
பனியாய் கரைகின்றேன்.............!

காதலியே...காதலியே
என் இதயத்தைப் பாரடி
என்னிதயமே நீயாக
பித்தம்கொள்ள வைக்குதடி
இரக்கம்கொண்டு கேளடி
உன் இன்ப ராகம் நானடி.....!
------------------------------------------------------------

எழுதியவர் : சுசானா (21-Dec-13, 5:39 pm)
பார்வை : 197

மேலே