வரம் வேண்டும் தாயே
ஒளியை ஒலியை
உயிரை உருவை
படைத்தாய் சுமந்தாய்
பார் காண வைத்தாய்
அன்பை அறிவை
அழகிய தமிழை
வெள்ளை அமுதொடு
கலந்தே கொடுத்தாய்
உன்னை கரைத்து
உணவை கொடுத்தாய்
என் பசி போக்கி
இன்பம் கொண்டாய்
நீராய் காற்றாய்
நிலமாய் நெருப்பாய்
உலகே நீயாய்
நின்றே காத்தாய்
இன்னொரு பிறவி
உண்டென்று கொண்டால்
என் தாயும் நீயே
உன் சேயும் நானே..