காத்திருப்பு --- மணியன்
உருவான நாள் முதலாய்
கருவறையில் காத்திருப்பு. . .
வெளியான நேரம் முதல்
துளிப்பாலுக்காய் காத்திருப்பு. . .
தமையன் வைக்கப் போகும்
பொம்மைக்காய் காத்திருப்பு. . .
வந்தவுடன் அணைத்து மகிழும்
தந்தைக்காய் காத்திருப்பு. . . .
துள்ளி விளையாட தினம்
நட்புக்காய் காத்திருப்பு. . . .
பள்ளி செல்ல வகையான
பேருந்துக்காய் காத்திருப்பு. . . .
அள்ளிக் கல்வி தரும்
ஆசானுக்காய் காத்திருப்பு. . . .
தள்ளி நின்று நகையும்
காதலுக்காய் காத்திருப்பு. . . .
கெட்டி மேளம் கேட்க
பட்டுடனே காத்திருப்பு. . . .
பள்ளி அறை தன்னில்
பாங்குடனே காத்திருப்பு. . .
மருத்துவமனை இருக்கை தன்னில்
மகவுக்காய் காத்திருப்பு. . . . .
மகவதன் அகவு கூட
அலுவலக காத்திருப்பு. . . .
அம்பத்தி எட்டு வந்தால்
அசதியுடன் காத்திருப்பு. . . .
களைப்புடனே களிப்புற்றும் காலனின்
கண்ணசைவுக்காய் காத்திருப்பு. . . .
காத்திருப்பு. . .
காத்திருப்பு. . . .
காலமெலாம் . . .
காத்திருப்பு. . . . . . . . .
*-*-*-*-* *-*-*-*-* *-*-*-*-*