புரிகிறதா தாய்மனசு

புரிகிறதா தாய்மனசு?

எதிர் காலம் என்று உன்னை
இதயம் சுமந்தேன் கண்ணே
கனவே மகனே என் மகனே!

உன்னை ஈன்றிடும் போது—கொண்ட
உவகையில் நான் உயிர்த்து.
உலகில் வாழ்கிறேன் என் உறவே!
நான் வாழ்வதன் அர்த்தமே!
நீ வாழ்வதைக் காண்பதே.
.(எதிர்)
காலம் கைகூட நாலும் நீ தேட
வளரும் கல்வி பெறவே
நாளும் நானும் உயிர்க்கிறேன்
கேளு அன்பு மகனே!

தாயின் மனம் போலும் நின்று வாழ
சேயின் வளம்காண என் நாளில்
நான் உன் நலம் நோக்கி இருக் கிறேன்
வாழ்வும் இனிநீயே மகனே!
கெடும் குடி காரன் ஆக மாறி
படு வதுமேன் கூறய்யா
.(எதிர
உயிரின் உயிராக உனையே நினைவாக
உணரந்தேன் நானும் பாவி`
பிறப்பின் பயனாக வாழ்வின் சுகமாக
தொடர்ந்தேன் நானும் உயிரே!
பாவம் நினைக்காத அன்னை மனமே
பார்த்துத் துடிக்கிறேன் தினமே.
ஆடிக் கிடந்தாலும் பிள்ளை தானென
அதுவாய் அழுகுது தேடியே!
அன்பு மகனே ஆசை வரமே
அழிக்கும் குடியும் ஏனடா?

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா (4-Mar-14, 11:16 pm)
பார்வை : 150

மேலே