வா
வட்டத்துக்குள் வருத்தங்களுடன் உழலாமல்
வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க வாருங்கள்
வாகனப்புகையில் மூச்சுமுட்டி கண்கலங்காமல்
வயல்வெளிகளில் பெருமூச்சு விட்டு பாருங்கள்
வாய்க்காலில் ஓடிப்பாயும் தண்ணீரில்
வெறுங்காலில் நடைபழகி உற்சாகமாகுங்கள்
வாசனைப்பூக்களை மட்டுமே நாடாமல்
செடிகொடிகளை முகர்ந்து மகிழுங்கள்
வாடைகாற்றின் பனியில் நடுங்காமல்
விரைப்பாக வீரநடை போடுங்கள்
வாழ்வது ஒருமுறை மனச்சோர்வின்றி
வாழ்நாளில் வாழ்க்கையை காதலியுங்கள்.