என் உடலே பொன் உடலே

விழித்திருந்த இரவுகளில்
விழித்திருந்தால்
விழிகள்
விழித்திருக்காமலிருக்கலாம்......

படுத்திருந்த பகல்களில்
படுக்காமலிருந்தால்
படுக்கை
படுக்காமலிருக்கலாம்.........

தவித்திருந்த போது
தவிர்த்திருந்தால்
தவி
தவியாமலிருக்கலாம்.....

நினைத்தபோது
நினைத்திருந்தால்
நினை
நினைத்தே
நிலையாக இருந்திருக்கலாம்
நினைவு தவருமுன்
நிலை கெட்டதை
நினைத்தென்னபயன்.....

விலை மாது பட்டம்
விலை போன எனக்கு
விதியாலே விளைந்தது
நிலவுலகம் சென்றாவது
நிலையான வாழ்வு வாழ
நினைவிழக்கும்
நிமிடத்தில்
நிலவுலக இராஜா
நினை வேண்டுகிறேன்....

எழுதியவர் : நஞ்சப்பன் (4-Mar-14, 10:08 pm)
சேர்த்தது : நஞ்சப்பன்
Tanglish : en udale pon udale
பார்வை : 48

மேலே