என்னை பெற்றவளே
![](https://eluthu.com/images/loading.gif)
பெற்றெடுத்தவள் பெயர் கொடுத்தவள்
வாழ்பவள் என் அன்பு தெய்வமாக
கற்றுத்தந்தவள் அழகு குணங்கள் தந்தவள்
நிளைப்பவள் என் உயிரின் உறவாக// //
// //
உலகை தந்தவள் உலகில் உயிரை தந்தவள் வளர்த்தவள் என் மனதின் நினைவாக
பாசம் வைத்தவள் பரிவு நெஞ்சம் கொண்டவள்
சுமந்தவள் என் கனவின் இருளாக// //
// //
வாழவைத்தவள் எனை தாங்கி பிடித்தவள்
சுமந்தவள் என் கருணை தெய்வமாக
பேசவைத்தவள் நிலவை காட்டிகொடுத்தவள்
பெற்றவள் என் கருணை கடலாக// //
// //
பொறுமையானவள் சர்வ குணத்தை பெற்றவள்
அணைத்தவள் என் வாழ்க்கை தொடராக
சுமைகள் மறந்தவள் எனை என்றும் சுமந்தவள்
சுமப்பவள் என் மூச்சின் நிழலாக// //
// //
கவிதையானவள் கவிதை உலகில் வாழ்பவள்
கவியவள் என் எழுத்தின் வரியாக
சொந்தம் கொண்டவள் சுகத்தையென்றும்
துறந்தவள் நிறைந்தவள் என் அன்பு கடலாக// //
// //
சிரிக்கவைத்தவள் மொழிகள் கற்றுத்தந்தவள்
வளர்த்தவள் என் மானம் மறைத்தவளாக
மகிமையானவள் புகழின் உரிமையானவள்
வாழ்பவள் என் இனிய அம்மாவாக// //
// //