அதிலென்ன நியாயம்

நகைச்சுவைக் காட்சிகளில்
சந்தர்ப்ப வசத்தில்,
நகைச்சுவை நாயகனை அடிக்க
சம்பந்தம் இல்லாமலே
சுற்றியுள்ளவர் எல்லாம்
அணி திரளுவார்
ஒருவனைப் பிரித்து மேய்வதற்கு..!

எங்கோ இருக்கும் கோபத்தை
எங்கோ காட்டிவிட்டு
வீரம் காட்டிவிட்டதாய்
செருக்குடன் விடைபெறுவார்
இயலாமையோ, அறியாமையோ
பொறாமையோ ஏதோ ஓர் ஆமையுடன்..!

கும்பலாய் சேர்ந்து அடிப்பதில்
அதிலொரு சந்தோசம் அவர்களுக்கு....
அவ்வளவு வலிகளையும் தாங்கி
மீண்டும் வெற்றிநடை போட்டு
மீண்டு வருவார்
நம்ம நகைச்சுவை வீர நாயகர் ...!

ஒற்றைக்கு ஒற்றை
அதுதானே வீரம் .....
அடியாள் சேர்த்து
கும்பலில் கோவிந்தா
அதிலென்ன நியாயம் ... ....!!!!!!!1??

எழுதியவர் : சுசானா (11-Dec-13, 3:35 pm)
பார்வை : 245

மேலே