மனிதனாய் வாழ்

குரங்கின் மரபுவந்து கூன்நிமிர்ந்த மனிதா
செய்தகுற்றங்களால் தலைகுனிந்து வாழ்ந்துவரும் மனிதா
ஆறறிவும் ஆரடியும் அனைத்தும் கொண்டு
நீ மறந்துவிட்டாய் மனிதனென்ற ஒன்றை மட்டும் !

விலங்கிலிருந்து உடலளவில் வேறுபட்டாய் மனிதா
மனதளவில் மறலையோ ஏன்தானோ மனிதா
அடுத்தவரை கொன்றுதின்ன அலைவதுதான் ஏனோ
அவருடமையை உனதாக்க முயல்வதுதான் ஏனோ ......

உதவிசெய்ய மனிதரென்று ஒருவருமே இல்லை
உபத்தரவம் செய்பவரே ஓராயிரம் கோடி
அவன்சிந்தும் ரத்தத்தில் ஆனந்தம் ஏனோ
அதுஉனக்கு திரும்புகையில் சோகம்தான் ஏனோ ........

நீமட்டும் வாழ்ந்திடவே எண்ணம் கொண்டாய்
பிறர்வாழ்வுதன்னை கெடுப்பதிலெ லட்சியம் கொண்டாய்
நீசென்று செய்யாத உதவி தன்னை
உனக்குமட்டும் கேட்டாயோ நியாயமா மனிதா ........

சுயநலமாய் சொத்துசேர்த்து செல்வந்தன் ஆகி
நீ சுடுகாடு போகையிலே எதுவரும் கூடே
பெத்துவைத்த பிள்ளைகூட சொத்துகணக்கு பார்க்கும்
நீ பேரெடுத்த பெயர்தானே உன்னுடன் வாழும் ..........

மனிதரையெல்லாம் மதித்துநீ மகானாய் வாழு
பொதுநலமாய் சிந்துத்து பூவுலகு சேறு
உனெக்கென்று பார்க்காமல் உதவிபல செய்து
நீ உலகைவிட்டு போனபின்பு உன்னைமனிதனென்பார் கேளு

எழுதியவர் : வினாயகமுருகன் (11-Dec-13, 3:23 pm)
பார்வை : 108

மேலே